VANATHI SRINIVASAN CRITICIZE ACTOR KAMALHASSAN SKV
'மே 2ம் தேதிக்கு பின் கமல்ஹாசன் பிக்பாஸ் போகலாம்' - வானதி சீனிவாசன் விமர்சனம்
வானதி சீனிவாசன்
CAA குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு இருப்பது பற்றி, அதிமுக தலைவர்களுடன் சாதக, பாதகங்கள் குறித்து உட்கார்ந்து பேசுவோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
டி.வி ஸ்கிரினில் வந்து விட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மே 2ம் தேதிக்கு பின் பிக்பாஸ் அல்லது புதிய படத்தில் நடிக்க கமல் போகலாம் என பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த முறை தோல்லி அடைந்து இருந்தாலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்த்து இருக்கின்றேன்.
கோவை தெற்கு தொகுதியில் நிச்சயமாக 100 சதவீதம் பா.ஜ.க வசமாக போகின்றது. மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டதை தாண்டி சிறப்பான நகரமாக மாற்றுவோம். கோவையை சர்வதேச நகரமாக மாற்றுவோம்.
சினிமா பிரபலங்கள் அத்தனை பேரும் அரசியலில் வெற்றி பெற்றதில்லை. திரைதுறையில் இருந்து வந்தாலும் மக்கள் பணி செய்தவர்கள் மட்டுமே அரசியலில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.
டி.வி ஸ்கிரின்ல வந்து விட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மே 2ம் தேதிக்கு பின் பிக்பாஸ் அல்லது புதிய படத்தில் நடிக்க கமல் போகலாம். என்னுடைய சொத்து மதிப்பு உயர காரணம் மூதாதையர் குடும்ப சொத்தில் பாகபிரிவினை வந்தது.
CAA குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு இருப்பது பற்றி, அதிமுக தலைவர்களுடன் சாதக, பாதகங்கள் குறித்து உட்கார்ந்து பேசுவோம் என தெரிவித்துள்ளார்.