பா.ஜ.கவின் தேசிய மகளிரணித் தலைவியாக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்

பா.ஜ.கவின் தேசிய மகளிரணித் தலைவியாக வானதி ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.கவின் தேசிய மகளிரணித் தலைவியாக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்
வானதி ஸ்ரீனிவாசன்
  • Share this:
பீகார், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, புதிய தேசிய நிர்வாகிகளின் பட்டியலை செப்டம்பர் மாதம் 26-ம் தேதி அறிவித்தார். இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் தேசிய அளவிலான பதவிகள் வழங்கப்படவில்லை. ஏற்கெனவே, ஹெச்.ராஜாவுக்கு வழங்கப்பட்டிருந்த தேசியச் செயலாளர் பதவியிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழக பா.ஜ.கவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று பேச்சுகள் எழுந்தன. அப்போது, முக்கியமானவர்களுக்கு பின்னர் பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்களாக அறியப்படும் பொன்.ராதா கிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், ஹெச்.ராஜா உள்ளிட்டவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், தமிழக பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்களுக்கு முக்கிய அரசுப் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் பேச்சுகள் எழுந்தன.

இந்தநிலையில், தமிழக பா.ஜ.க முக்கியத் தலைவராக அறியப்பட்ட வானதி ஸ்ரீனிவாசனக்கு தேசிய மகளிரணித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க வெளியிட்டுள்ள அறிவில், ‘பா.ஜ.கவின் தேசிய மகளிரணித் தலைவராக வானதி ஸ்ரீனிவாசனை ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். உடனடியாக அவர் இந்தப் பதவியில் நியமிக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வானதி ஸ்ரீனிவாசனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக பா.ஜ.க வாழ்த்து தெரிவித்துள்ளது.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading