ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பட்டியல் சமூக பெண்கள் காலில் விழுந்து ஆசி பெற்ற வானதி சீனிவாசன்...!

பட்டியல் சமூக பெண்கள் காலில் விழுந்து ஆசி பெற்ற வானதி சீனிவாசன்...!

வானதி சீனிவாசன்.

வானதி சீனிவாசன்.

தனதுல சொந்த  கிராமமான உலியம்பாளையத்திற்கு சென்ற வானதி சீனிவாசன் பட்டியலின மக்களின் கோவிலில் சாமி கும்பிட்டதுடன் , அங்கிருந்த பட்டியலின  பெண்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பா.ஜ.க மகளிரணி மாநில தலைவராக பொறுப்பு ஏற்ற பின் சொந்த கிராமமான உப்பிலிபாளையத்திற்கு சென்ற வானதி சீனிவாசன் , பட்டியல் சமூக பெண்களிடம் காலில் விழுந்து ஆசிபெற்றார்.

பா.ஜ.க மகளிரணி தலைவராக பொறுப்பேற்ற பின் கோவை திரும்பிய வானதி சீனிவாசனுக்கு இன்று விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வானதி சீனிவாசன் பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம் உட்படபல்வேறு ஆன்மீக  பெரியவர்களை சந்தித்து ஆசிபெற்றார்.

Also read... சூலூர் அரசுப்பள்ளியில் கடவுள் படங்களுடன் வைக்கப்பட்ட நடிகர் சிவக்குமார் படம் - சர்ச்சையை தொடர்ந்து அகற்றம்

அதன் பின்னர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தனதுல சொந்த  கிராமமான உலியம்பாளையத்திற்கு சென்ற வானதி சீனிவாசன் பட்டியலின மக்களின் கோவிலில் சாமி கும்பிட்டதுடன் , அங்கிருந்த பட்டியலின  பெண்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதனை தொடர்ந்து பட்டியலின  பெண்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: BJP, Vanathi srinivasan