• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோதாவரி, காவிரி இணைப்பு குறித்து பிரதமரிடம் ஸ்டாலின் பேசவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன் வேண்டுகோள்

கோதாவரி, காவிரி இணைப்பு குறித்து பிரதமரிடம் ஸ்டாலின் பேசவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன் வேண்டுகோள்

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

சிவசங்கர் பாபா கைது நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் லகு உத்யோக் பாரதி, டாப்மா ஆகிய தொழில் அமைப்புகளின் சார்பில் தடுப்பூசி முகாமினை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் இன்று தொடக்கி வைத்தார். இந்த தடுப்பூசி முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வழங்கி வருகின்றார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக மேற்கொள்ளும் டெல்லி பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். பா.ஜ.கவை கடந்த காலங்களில் மிக கடுமையாக, கேவலமாக விமர்சித்த திமுக, இனிமேலாவது ஆக்கபூர்வமாக பிரதமரின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும். இந்த மாதத்திற்கு மாநில அரசுக்கு 42 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு இருக்கின்றது. தடுப்பூசிகளை மாநில அரசு விரைந்து பொதுமக்களுக்கு போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பூசிகளை வாங்கி வைத்து கொண்டு தாமதப்படுத்தும் போது தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் வீணாகும்நிலை ஏற்படுகின்றது. தடுப்பூசிகள் வர வர கால விரயம் இல்லாமல் ஊசிகளை செலுத்தினால் தேவைக்கு ஏற்ப மத்திய அரசு மாநில அரசுக்கு ஊசிகளை வழங்கும். பிரதமருடன் இன்று நடக்கும் சந்திப்பில்
கோதாவரி, காவிரி நதி நீர் இணைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் பேச வேண்டும்.

நதி நீர் இணைப்பிற்கு மத்திய அரசின் நிதி உதவிகளை பெற்று மாநில அரசு நிலத்தை கையகப்படுத்தி திட்டத்தை செயல்படுத்தினால், 3 வருடத்தில் பிரதமரே நேரில் வந்து திட்டத்தை துவங்கி வைக்க முடியும். சிவசங்கர் பாபா கைது விவகாரத்தை பொறுத்த வரை, அரசு அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டபூர்மான நடவடிக்கைக்கு பா.ஜ.க எதிராக இல்லை. ஆனால் பழிவாங்கும் நடவடிக்கைளாக சட்டத்தை பயன்படுத்த கூடாது என்பது எங்கள் கோரிக்கை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான உதவிகளை செய்ய பா.ஜ.க துணை நிற்கின்றோம். பாதிக்கப்பட்டவர்களின் குரலாக இருக்க பா.ஜ.க எப்போதும் தயங்கியதில்லை’ என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: