வடலூர் வள்ளலார் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...!

வள்ளலார் தைப்பூச விழா

  • News18
  • Last Updated :
  • Share this:
கடலூர் மாவட்டம், வடலூர் சத்தியஞான சபையில், வள்ளலார் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள, வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

ஜோதி தரிசனத்தை காண ஏராளமானோர் வடலூர் வந்து குவிவார்கள். இந்த நிலையில் 149-வது தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

40 கிராம மக்கள் ஒன்று கூடி சீர்வரிசை கொண்டு வந்த கிராம மக்கள் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, அவர் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றப்பட்டது.

நாளை தைப்பூச திருவிழாவன்று காலை 6 மணி முதல் 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: