Home /News /tamil-nadu /

நடிகர் அஜித் மனதளவில் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டவர் - ட்விஸ்ட் அடிக்கும் கடம்பூர் ராஜூ

நடிகர் அஜித் மனதளவில் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டவர் - ட்விஸ்ட் அடிக்கும் கடம்பூர் ராஜூ

அஜித் குமார்

அஜித் குமார்

Actor Ajith - Jayalalithaa: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில், வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது மிகப் பொருத்தமாக இருக்கிறது - கடம்பூர் ராஜூ

    நடிகர் அஜித்குமார் மனதளவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டவர்  என முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ ராஜு தெரிவித்துள்ளார். 

    கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில்,  “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பற்றும், பாசமும், பக்தியும், மரியாதையும் உள்ளவர் நடிகர் அஜித்குமார். இருமுறை நடிகர் அஜித்குமாரை நேரில் வரவழைத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.

    Also Read: அதிமுக-வில் தலைமையே கிடையாது - பகீர் கிளப்பும் செல்லூர் ராஜூ..

    நடிகர் அஜித்குமார் மனதளவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டவர். ஆனால் நடிகர் அஜித்குமார் அரசியல் சாயம் இல்லாமல் சினிமா துறையில் மட்டும் கவனம் செலுத்துகிறார். இருந்தபோதிலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் மானசீகமாக யாராவது ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்வது வழக்கம். இந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது மிகப் பொருத்தமாக இருக்கும் என்றார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Actor Ajith, ADMK, Ajithkumar, Jayalalitha, Kadambur raju, Valimai

    அடுத்த செய்தி