• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக அரசின் வலிமை சிமென்ட் விற்பனை தொடக்கம்... விலை எவ்வளவு தெரியுமா?

தமிழக அரசின் வலிமை சிமென்ட் விற்பனை தொடக்கம்... விலை எவ்வளவு தெரியுமா?

50 கிலோ எடை கொண்டதாக வலிமை சிமென்ட் மூட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் மற்றும் சூப்பீரியர் என 2 தரங்களில் வலிமை சிமென்ட் விற்பனை செய்யப்படவுள்ளது

  • Share this:
    தமிழ்நாடு அரசு உற்பத்தி செய்யும் வலிமை சிமென்ட்டின் விற்பனை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

    'வலியதோர் உலகம் செய்வோம்' என்பதை மையக்கருத்தாக கொண்டு இந்த சிமென்ட் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக சிமென்ட் விலை தாறுமாறாக உயர்ந்ததால், கட்டுமான தொழில் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் குறைந்த விலையில் அரசின் வலிமை சிமென்ட் சந்தைக்கு வந்துள்ளது.

    இதன் முதல் விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். அப்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    50 கிலோ எடை கொண்டதாக வலிமை சிமென்ட் மூட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் மற்றும் சூப்பீரியர் என 2 தரங்களில் வலிமை சிமென்ட் விற்பனை செய்யப்படவுள்ளது. ப்ரீமியம் ரகம் ரூ. 350-க்கும், சூப்பீரியர் ரகம் ரூ. 365-க்கும்  விற்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிச்சந்தையில் தனியார் சிமென்ட்டுகளின் விலை அதிகபட்சமாக ரூ. 490 வரை விற்பனையாகுவதாக கூறப்படுகிறது.

    தனியார் சிமென்டுகளின் விற்பனைக்கு போட்டியாக வலிமை சிமென்ட் அமையும் என்பதால் தனியார் சிமென்டுகளின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக அரசு ஏற்கனவே அரசு சிமென்ட்டை விற்பனை செய்து வருகிறது. மாதம் ஒன்றுக்கு 90 ஆயிரம் டன் இந்த வகை சிமென்ட் விற்பனையாகிறது. முதல்கட்டமாக வலிமை சிமென்ட் 30 ஆயிரம் டன் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதம் தனியார் சிமென்ட் மூட்டை ஒன்று ரூ. 420-450-ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 470-490 வரை விற்பனையாகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Musthak
    First published: