முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்.. உதயநிதிக்கு வாழ்த்துக் கூறிய வைரமுத்து

உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்.. உதயநிதிக்கு வாழ்த்துக் கூறிய வைரமுத்து

வாழ்த்து கூறிய வைரமுத்து

வாழ்த்து கூறிய வைரமுத்து

Vairamuthu | அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9:30 மணிக்கு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற விழா தொடங்கியது.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்  உதயநிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில், “ உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான்.இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது. உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள். தளபதி மகனே வருக. தமிழர்க்கு மேன்மை தருக. அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

35-வது அமைச்சராக பதவிற்ற உதயநிதிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: DMK, MK Stalin, Poet vairamuththu, Udhayanidhi Stalin