Home /News /tamil-nadu /

'மு.க. ஸ்டாலினின் பிறவிக்குணம் இவைதான்' - உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் வைரமுத்து

'மு.க. ஸ்டாலினின் பிறவிக்குணம் இவைதான்' - உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் வைரமுத்து

1970 பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒரு இளைஞர் தமிழ்நாடு, ஆந்திர, புதுச்சேரி முதல்வர்களைக் கூட்டி ஒரே மேடையில் அமர வைத்துக் கொண்டாடினார். அதுவும் 17 வயதில்.

1970 பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒரு இளைஞர் தமிழ்நாடு, ஆந்திர, புதுச்சேரி முதல்வர்களைக் கூட்டி ஒரே மேடையில் அமர வைத்துக் கொண்டாடினார். அதுவும் 17 வயதில்.

1970 பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒரு இளைஞர் தமிழ்நாடு, ஆந்திர, புதுச்சேரி முதல்வர்களைக் கூட்டி ஒரே மேடையில் அமர வைத்துக் கொண்டாடினார். அதுவும் 17 வயதில்.

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

  கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக்கொண்டார். இந்த சுயசரிதை நூலில், மு.க.ஸ்டாலின் அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார். பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளிக்கொண்டுவந்துள்ளது.

  இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோருக்கு மேடையில் இடமளிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி கனிமொழி எம்.பி வரவேற்பு உரையாற்றினார்.

  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கவிஞர் வைரமுத்து பேசியதாவது இந்த மேடையைப் பார்த்து, வியந்து நிற்கிறேன் இது கிடைத்தற்கரிய மேடை. யார் யார் அமர்ந்திருக்க ஆளுமைகள் என்று பார்த்தால், இந்தியா புருவங்களை உயர்த்தி பார்க்கும். இந்தியாவின் தேசிய நட்சத்திரம் ராகுல்காந்தி, கேரள முதலமைச்சர் பிரனாய் விஜயன், முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், அமைச்சர்கள் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு, கனிமொழி மற்றும் நடிகர் சத்யராஜ்.

  இதையும் படிங்க - அண்ணன் ஸ்டாலின், தம்பி ராகுல்... உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டில் சத்யராஜ் கலகலப்பு

  இத்தனை பெருமக்களால் இந்த மேடை உயர்ந்து நிற்கிறது. இந்த மேடையில் எங்கள் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், தான் எழுதிய சுயசரிதையைத் தேசிய அடையாளங்களோடு வெளியிடுகிறார்.

  ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்த மாநிலத்தின் கதையை வெளியிடுகிறார். ஆனால் தேசிய அடையாளங்களோடு வெளியிடுகிறார். இத்தனை பெருமைகளை ஒன்றுதிரட்டி வெளியிடுகிறார். ஒரு மகா கவிஞர் சொன்னது மாதிரி நிலவுகளையும் நட்சத்திரங்களையும் ஒரு மேடையில் கொட்டி வைத்திருக்கிறார். இப்படி இந்த ஆளுமை எப்படி இவருக்கு ஏற்பட்டது. இந்த சிந்தனை எப்படி முளைத்தது. இன்று நேற்று வந்த சிந்தனை இல்லை. இந்த நூலைப் படித்தால் இந்த கேள்விக்கு விடை கிடைக்கும்.

  இதையும் படிங்க - ஸ்டாலினுக்கு இத்தனை வயதா? எனது அம்மா நம்பவில்லை - மேடையை கலகலப்பாக்கிய ராகுல் காந்தி

  அனைவரும் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். இந்த புத்தகத்தை முழுமையாக வாசிக்க முடியவில்லை என்றால் முதல்வர் ஸ்டாலின் எழுதிய அந்த முன்னுரையை மட்டும் பேச்சாளர்கள் மனப்பாடம் செய்து மேடைகளில் பேசுங்கள். இந்த விஷயம் சாதாரணமாக ஒரு நாளில் தோன்றியதல்ல.

  1970 பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒரு இளைஞர் தமிழ்நாடு, ஆந்திர, புதுச்சேரி முதல்வர்களைக் கூட்டி ஒரே மேடையில் அமர வைத்துக் கொண்டாடினார். அதுவும் 17 வயதில். அந்த இளைஞருக்குப் பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

  இவருக்குப் பிறவிக்குணம் செயல்படுவது, சிந்திப்பது, விரிந்து உரையாடுவது. களம் காணுவது. இவை அவருக்குப் பிறவிக் குணம், உதிரத்தில் ஊறிய குணம். அண்ணா பெரியார் கலைஞர் என்ற மூன்று பேருடைய ஆளுமைகளை தனக்குள் வாங்கி நடைபெற வேண்டும் என்ற வேகம். அவரிடம் இருக்கிறது.
  இவ்வாறு வைரமுத்து பேசினார்.
  Published by:Musthak
  First published:

  அடுத்த செய்தி