• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ப.சிதம்பரத்தைக் கண்டதும் கண் கலங்கினேன்! வைரமுத்து உருக்கம்

ப.சிதம்பரத்தைக் கண்டதும் கண் கலங்கினேன்! வைரமுத்து உருக்கம்

வைரமுத்து

வைரமுத்து

  • News18
  • Last Updated :
  • Share this:
    ப.சிதம்பரத்தின் உடல் எடைக் குறைந்தாலும், அவருடைய மன உறுதி குறையவில்லை என்று அவரைச் சந்தித்தப் பிறகு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோதமாக அனுமதி அளித்து பண முறைகேடு செய்ததாக சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17-ம் தேதிவரை நீட்டித்து சி.பி.ஐ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்தநிலையில், ப.சிதம்பரம் இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கவிஞர் வைரமுத்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்று ப.சிதம்பரத்தைச் சந்தித்து பேசினார்.

    சிதம்பரத்தைச் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, ‘ப.சிதம்பரத்தைக் கண்டதும் நான் கண் கலங்கினேன். அவரும் கண் கலங்கினார். அவரது உடல் எடைக் குறைந்தாலும், மன உறுதி குறையவில்லை. சிதம்பரத்தின் உடல்நிலை கருதி, நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

    முன்னதாக, ப. சிதம்பரமும், வைரமுத்துவும் திருகுறளால்  பேசுக்கொண்டனர்.

    வைரமுத்துவிடம் ப. சிதம்பரம் , “ இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.” என்று சொல்ல, வைரமுத்து , ”அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை.” என்றார்..

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: