ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வைரமுத்து ஆண்டாளை இழிவுபடுத்தவில்லை: இந்திரா பார்த்தசாரதி

வைரமுத்து ஆண்டாளை இழிவுபடுத்தவில்லை: இந்திரா பார்த்தசாரதி

வைரமுத்து ஆண்டாளை இழிவுபடுத்தவில்லை: இந்திரா பார்த்தசாரதி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஆண்டாளை இழிவுபடுத்தி கவிஞர் வைரமுத்து ஏதும் சொல்லவில்லை என்றும், இது குறித்த சர்ச்சை தேவையற்றதை மிகைப்படுத்துவதாகவும் முதுபெரும் இலக்கிய ஆளுமையான இந்திரா பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

இந்து அமைப்புகள், வைரமுத்துவுக்கு எதிராக மிரட்டல் விடுத்து, போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், ஆண்டாளைத் தற்கால அசிங்கமான அரசியல் ஆதாயங்களுக்கு கொச்சைப்படுத்த வேண்டாம் என்று இந்திரா பார்த்தசாரதி தனது வலைப்பக்கத்தில் கூறியுள்ளார். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகவும், நம்மாழ்வாருக்கு இணை வைத்து வைணவ சம்பிரதாயத்தில் போற்றப்படும் ஆண்டாள் குறித்து, அமெரிக்க ஆராய்ச்சியாளரின் கருத்தை எடுத்துக் கூறுவது எவ்வாறு தவறாகும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண்டாளைப் பற்றிக் கவிஞர் வைரமுத்து கூறிய தகவல் தவறானது என்று வாதாடலாமே தவிர, அவர் ஆண்டாளை அவமானப் படுத்தினார் என்று சொல்வதற்கு இடமேயில்லை என்று கூறியுள்ளார். பல்லவர், சோழர் காலத்தில் தேவதாசிகளுக்குக் கோயிலில், அர்ச்சகர்களுக்கு ஈடான அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது என்று சொல்லும் அவர், சங்க காலத்தில், பாணர், விறலியர், கூத்தர் ஆகியோருக்கு சமூகத்தில் உயர்ந்த இடம் தரப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார். பிற்காலத்தில், அவர்கள் தகுதி குறைந்தது, சமூகச் சீரழிவைக் காட்டுகின்றதே தவிர, அவர்களைப் பற்றிய விமர்சனம் அல்ல என விளக்கியுள்ளார். மேலும், இதைப் பேசுவது சீரழிந்த நம் முகத்தை நமக்கே எடுத்துக் காட்டும் கண்ணாடி என்றும் இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார்.

First published:

Tags: Aandal, Indira Parthasarathy, Literature, Sangh Parivar, Vairamuthu