ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஐநா தீர்மானத்தில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும்.. பிரதமருக்கு வைகோ கடிதம்

ஐநா தீர்மானத்தில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும்.. பிரதமருக்கு வைகோ கடிதம்

வைகோ

வைகோ

ஈழத்தமிழருக்கு நீதி, மறுசீரமைப்பு மற்றும் அமைதியை பெற்றுத்த இந்தியா ஐநா மனித உரிமை கவுன்சில் மூலம் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ள வேண்டும் என வைகோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ஐநா மனித உரிமை சபையின் 51 ஆவது கூட்டத்தில் இலங்கைத் தமிழர் உரிமைக்காக கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் வைகோ பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனித உரிமைப் பேரவையில் இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு சர்வதேச குற்ற இயல் மன்றத்தில் விசாரணை நடத்தவும், இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலங்களில் தமிழ் ஈழம் குறித்துப் பொதுவாக்கெடுப்பு நடத்தவும், காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தரவும், சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யவும், ஈழத்தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள பகுதிகளைத் திரும்ப ஈழத்தமிழர்களுக்கே கொடுக்கவும், தமிழர் பகுதிகளில் உள்ள இலங்கை இராணுவத்தை திரும்பப் பெறவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவரவும் வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இதையும் படிங்க: அரசுப் பேருந்தில் செல்லும் பெண்களை ஏளனமாக பேசக்கூடாது என்பது அமைச்சர்களுக்கு பொருந்தாதா? – டிடிவி தினகரன்கேள்வி

  மேலும் அவர், ஈழத்தமிழருக்கு நீதி, மறுசீரமைப்பு மற்றும் அமைதியை பெற்றுத்த இந்தியா ஐநா மனித உரிமை கவுன்சில் மூலம் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

  ரஷ்யா-உக்ரைன் போரில் போர் குற்றத்திற்கு எதிராக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்த நிலைப்பாட்டை சுட்டிக்காட்டிய வைகோ, இதை நிலைப்பாட்டை ஒத்துச்சென்று இலங்கையில் இறுதி கட்ட போரின் போது நடைபெற்ற குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: PM Modi, Tamil Eelam, Vaiko