ஈழப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை! கனடா தீர்மானத்துக்கு வைகோ வரவேற்பு

இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதல் குறித்தும், 2009 -ம் ஆண்டில் இறுதிக் கட்டப் போர் குறித்தும் விசாரணை செய்வதற்கு, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை அமைப்பு ஒன்றை அமைக்குமாறு, கனடா நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபைக்குக் கோரிக்கை விடுத்து இருக்கின்றது.

ஈழப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை! கனடா தீர்மானத்துக்கு வைகோ வரவேற்பு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
  • News18
  • Last Updated: June 22, 2019, 3:53 PM IST
  • Share this:
இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் படுகொலைக் குறித்தும், இறுதிக் கட்டப்போர் குறித்தும் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை அமைப்பு ஒன்றை அமைக்கவேண்டும் என்று கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈழத் தமிழ் இன அழிப்புக்கு ஐ.நா. நீதி விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி, கனடா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், வன்முறையாலும், போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றது. இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதல் குறித்தும், 2009 -ம் ஆண்டில் இறுதிக் கட்டப் போர் குறித்தும் விசாரணை செய்வதற்கு, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை அமைப்பு ஒன்றை அமைக்குமாறு, கனடா நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபைக்குக் கோரிக்கை விடுத்து இருக்கின்றது.


கனடா நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கின்ற இந்தத் தீர்மானம், ஈழத் தமிழர் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. கனடா அரசுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ம.தி.மு.கவின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினையில் உரிய நீதி கிடைப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:

First published: June 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading