1018 ஊர் பெயர்களில் திருத்தம்: குறைகளைக் களைய அறிஞர் குழு அமைக்க வைகோ வலியுறுத்தல்

1018 ஊர் பெயர்களில் திருத்தம் செய்யப்பட்டதை வரவேற்கும் வைகோ, அதன் குறைகளைக் களைய அறிஞர் குழு அமைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

1018 ஊர் பெயர்களில் திருத்தம்: குறைகளைக் களைய அறிஞர் குழு அமைக்க வைகோ வலியுறுத்தல்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
  • Share this:
ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்ற முறையில் மாற்றங்கள் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பாலான திருத்தங்கள் சரியாக இருப்பதாகவும் சில திருத்தங்களில் ஒரே அளவுகோல் பின்பற்றப்படவில்லை எனவும் கூறியுள்ளார். குறிப்பாக தமிழில் நெடில் எழுத்துகளை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என ஆணை வரையறுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Also see:இதேபோல் தமிழின் சிறப்பு 'ழ' கரத்திற்கு சில இடங்களில் Zh என்ற எழுத்துகளும், சில இடங்களில் l என்ற எழுத்தையும் பயன்படுத்தியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள வைகோ, தமிழ்நாட்டுக்கு வரும் சிறப்பு ழ கரத்திற்கு l என்ற எழுத்தைப் பயன்படுத்துவதால் மற்றவற்றிற்கு அதையே பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த குறைகளை எல்லாம் களைய அறிஞர் குழு ஒன்றைத் தேர்வு செய்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading