ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருக்குத் தெரு தீயிட்டுக் கொளுத்துவோம்! வைகோ கடும் எச்சரிக்கை

கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருக்குத் தெரு தீயிட்டுக் கொளுத்துவோம்! வைகோ கடும் எச்சரிக்கை

மோடியை எதிர்க்க தி.மு.க வாளாக இருந்தால் கூட்டணி கட்சிகள் நாங்கள் கேடயமாக இருப்போம். உங்கள் தலைமை ஏற்க தயாராக இருக்கிறோம்

மோடியை எதிர்க்க தி.மு.க வாளாக இருந்தால் கூட்டணி கட்சிகள் நாங்கள் கேடயமாக இருப்போம். உங்கள் தலைமை ஏற்க தயாராக இருக்கிறோம்

மோடியை எதிர்க்க தி.மு.க வாளாக இருந்தால் கூட்டணி கட்சிகள் நாங்கள் கேடயமாக இருப்போம். உங்கள் தலைமை ஏற்க தயாராக இருக்கிறோம்

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  மோடியை எதிர்க்க தி.மு.க வாளாக இருந்தால், கூட்டணி கட்சிகள் நாங்கள் கேடயமாக இருப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

  சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும்

  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சார்ந்த திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் ஈ ஆர் ஈஸ்வரன் , ஐ.யூ.எம்.எல் கட்சியின் காதர்மொய்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் ஓரே மேடையில் பங்கேற்றனர்.

  இந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ‘திருமாவளவன் எக்காரணத்தாலும் தோல்வி அடைந்துவிடக்கூடாது. திருமாவளவன் தேர்தலில் வெற்றி பெற்றால் அது கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி என சொன்னவர் மு.க.ஸ்டாலின். அதற்கு என் மனமார்ந்த நன்றி.

  இந்த சாதனையை கண்டு பூரிப்படைய கருணாநிதி இல்லை என்ற வருத்தம் தழுவுகிறது. அண்ணா மறைந்த போது கருணாநிதி கட்சியை கட்டி காப்பாற்றினார். தற்போது கருணாநிதி இல்லை. தி.மு.க சீர்குலையும் என நினைத்தவர்கள் எண்ணத்தில் மண்விழும் வகையில், புதிய சூரியனாய் மு.க.ஸ்டாலின் சாதனைப் படைத்துள்ளார்.

  நம் முன்னே இருக்கக்கூடிய சவால்கள் அதிகம். ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்து கேள்வி கேட்க முடியாமல் இருபதற்கு பதிலாக, உண்மையான எதிர்கட்சியாக இருந்து கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது தான் சிறந்தது.

  ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்கிற முழக்கம் ஆபத்தானது. அது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து விடும்.  இந்த முழக்கத்தில் இருந்து நாட்டை, தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டிய சவால் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.

  மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கருணாநிதியின் முழக்கத்தை மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும். இந்தி திணிப்பு என்பது மொழி திணிப்பு மட்டுமல்ல; கலச்சாரத் திணிப்பு. அதன்மூலம் நம்மை சிதைக்க முயற்சிக்கிறார்கள்.

  பிற மொழி பேசுபவர்களின் குடியேற்றம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. மொழி, கலாச்சாரத்தின் வழியே ஊடுருவ பார்த்தார்கள். தற்போது, குடியேற்றத்தின் மூலம் ஊடுருவி வருகிறார்கள்.

  தமிழகத்தில் பல துறைகளில் தமிழர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க மாநில சுயாட்சி முழக்கம் முக்கியமானது. அண்ணாவும், கருணாநிதியும் இந்தி திணிப்பை எதிர்த்ததால் தான், மோடி இங்கே வீழ்த்தப்பட்டிருக்கிறார். மோடியை எதிர்க்க தி.மு.க வாளாக இருந்தால் கூட்டணி கட்சிகள் நாங்கள் கேடயமாக இருப்போம். உங்கள் தலைமை ஏற்க தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

  அவரைத்தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் முத்தரசன், ‘தமிழ்நாட்டின் உரிமையை காக்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர வேண்டும். அதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைத் தாங்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

  அவரைத்தொடர்ந்து பேசிய வைகோ, ‘திராவிடக் கட்சிகளோடு மோதி, பா.ஜ.கவின் மூக்கு உடைபட்டுள்ளது. கருணாநிதியின் மகன், மு.க.ஸ்டாலின் அகில இந்தியாவின் மொத்தக் கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு திராவிட இயக்கத்தின் பெருமையை உயர்த்தியிருக்கிறார். கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் குறிப்பிட்ட பகுதியை தீயிட்டுக் கொளுத்தத் தயாராக இருக்கிறோம். அரசியல்சாசனத்தையே தீயிட்டு கொளுத்தியவர்கள். கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருக்கு தெரு தீயிட்டு கொளுத்துவோம்’ என்று தெரிவித்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Thol. Thirumavalavan, Vaiko