ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக ஆளுநர் மத்திய அரசின் ப்ரோக்கராக செயல்படுகிறார் - வைகோ பேச்சு

தமிழக ஆளுநர் மத்திய அரசின் ப்ரோக்கராக செயல்படுகிறார் - வைகோ பேச்சு

வைகோ

வைகோ

மூன்று பேரின் மரணதண்டனையை ரத்து செய்ய வைக்க முழுக்க முழுக்க பாடுப்பட்டது மதிமுக தான் என்றும், தமிழக ஆளுநர் மத்திய அரசின் ப்ரோக்கராக செயல்படுகிறார் என்றும் வைகோ பேசினார்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  7 பேரின் விடுதலை குறித்து கவர்னர் மாளிகையை என்னை போல் யாரும் முற்றுகையிட்டவர் யாரும் இல்லை என்று வைகோ பேசினார்.

  7 பேரின் விடுதலை குறித்து தோழமை கட்சிகளை ஒன்றினைத்து போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் ஆளுநர் இந்த விடுதலை விவகாரத்தை நிறுத்தி வைத்து இருக்கின்றார் என்றும், இந்த விவகாரம் உள்துறை அமைச்சகத்துக்கு எப்படி சென்றது என்றும்,  ஆளுநர் நேரடியாக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார் என்றால் அது வரம்பு மீறிய செயலாகும் என்றும் பேசினார்.

  எடப்பாடி இந்த காரியத்தை செய்து இருந்தார் என்றால் மத்திய அரசாங்கத்திற்கு கொத்தடிமை வேலை செய்கின்றவர் என்று அர்த்தம், இந்த ஏழு பேர் விடுதலைக்காக எங்களது இயக்கம் கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய் செலவழித்து உள்ளது .  இதுவரை கவர்னரை எங்களைப்போல் யாரும் அட்டாக் செய்தது கிடையாது என்று வைகோ பேசினார்.

  மூன்று பேரின் மரணதண்டனையை ரத்து செய்ய வைக்க முழுக்க முழுக்க பாடுப்பட்டது மதிமுக தான் என்றும், இதனையிடையே, தமிழக ஆளுநர் மத்திய அரசின் ப்ரோக்கராக செயல்படுகிறார் என்று வைகோ பேசினார்

  முகிலன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அஞ்சுகிறேன். அப்படி ஏதாவது நடந்திருந்தால் அதற்கு காரணம் அதிமுக அரசுதான்,

  அதுமட்டுமல்லாமல் காவல் துறைக்கு தலைமை தாங்கிய டிஜிபி தான் இதற்கு காரணம் என்றும், இது என்ன ஜனநாயக நாடா? அல்லது  யார் கேள்வி கேட்டாலும் அவர்களை தீர்த்து கட்டிவிடலாம் என்று நினைக்கின்ற பாசிச ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி குறியாக உள்ளது என்று வைகோ ஆவேசமாக பேசினார்.

  Also Watch: கோவையைச் சேர்ந்த முருகானந்தத்தை மையப்படுத்திய படத்திற்கு ஆஸ்கர் விருது

  Published by:Anand Kumar
  First published:

  Tags: MDMK, Vaiko