ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கூட்டணிக்காக உயிரையும் கொடுப்போம்: தேமுதிகவினருக்கு வைகோ எச்சரிக்கை!

கூட்டணிக்காக உயிரையும் கொடுப்போம்: தேமுதிகவினருக்கு வைகோ எச்சரிக்கை!

பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டை முற்றுகையிட சென்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற தேமுதிகவினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் தேமுதிக பேச்சு நடத்தி வந்தது. இதில், உடன்பாடு ஏதும் எட்டப்படாத நிலையில், தேமுதிக இணைச் செயலாளர் சுதீஷ், தங்களுடன் பேசியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

ஆனால், அரசியல் நாகரீகம் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறி, துரைமுருகனுக்கு தேமுதிகவினர் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், அக்கட்சியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டை முற்றுகையிடச் சென்றனர். அப்போது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், சிலரை போலீசார் தாக்கிதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரைமுருகனுக்கு எதிரான போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தேமுதிகவினர் தேவையில்லாமல் விபரீதங்களை விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டாம். கூட்டணிக்காக உயிரை கொடுத்தும் காப்போம் என்று வைகோ ஆவேசமாகக் கூறியுள்ளார்.

Published by:Vijay R
First published:

Tags: Duraimurugan, Lok Sabha Election 2019, Vaiko