Home /News /tamil-nadu /

கெயில் விவகாரத்துக்கு நிரந்தர முடிவுவேண்டும்: தற்கொலை செய்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு- முதல்வருக்கு வைகோ வலியுறுத்தல்

கெயில் விவகாரத்துக்கு நிரந்தர முடிவுவேண்டும்: தற்கொலை செய்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு- முதல்வருக்கு வைகோ வலியுறுத்தல்

வைகோ

வைகோ

கெயில் விவகாரப் பிரச்னையில் விரைவில் ஒரு முடிவு ஏற்பட தமிழக அரசு வழி வகுத்திட வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

    தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் இண்டூர் பகுதியில் தூக் கனாம்பள்ளம், பள்ளப்பட்டி, பாலவாடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலத்தில் கெயில் நிறுவன ஊழியர்கள் கேமராக்கள் மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார். அவருக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் கிணற்றை கெயில் நிறுவனத்தினர் கையகப்படுத்தி விடுவார்களோ? என்ற பீதியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மதியம் 12 மணியளவில் கணேசன், கரியப்பன அள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கு மன வேதனையில் இருந்த அவர், வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கெயில் நிறுவனம், வேளாண் விளைநிலங்களின் வழியாக, எரிகாற்றுக் குழாய் பதிப்பதற்கு, தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெடுஞ்சாலை ஓரமாகப் பதிக்கின்ற வகையில், மாற்று வழிகளில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரி வருகின்றார்கள். எனவே, முந்தைய அ.தி.மு.க. அரசு இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போதைய தி.மு.க. அரசும் அதே நிலைப்பாட்டைத்தான் மேற்கொண்டு இருக்கின்றது.

    இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், காரியபள்ளி கிராமத்தில், கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முனைந்துள்ளது. அதை எதிர்த்து அந்தப் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 65 சென்ட் நிலம் வைத்து இருக்கின்ற ஏழை விவசாயி கணேசன் என்பவர், தனது நிலம் முழுமையாகப் பறிபோவதைத் தாங்க முடியாமல், போராட்டம் நடந்து கொண்டு இருக்கின்ற இடத்திற்கு அருகிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, கடும் அதிர்ச்சி அளிக்கின்றது. அவரது உடலை வைத்து, இண்டூர் பேருந்து நிலையத்தின் முன்பு, விவசாயிகள் போராடி வருகின்றார்கள்.

    கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயி தற்கொலை - சடலத்துடன் மக்கள் சாலையில் போராட்டம்

    எனவே, விவசாயிகள் நலனைப் பாதுகாப்பதில் தொடர்ந்து அக்கறையுடன், விவசாயிகளுடன் இணைந்து நின்று செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு, இந்தப் பிரச்சினையில், விரைவில் ஒரு முடிவு ஏற்பட வழி வகுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். விவசாயி கணேசன் குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பு ஈடு வழங்கிட வேண்டும்; அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.

    கணேசனை இழந்து வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

     
    Published by:Karthick S
    First published:

    Tags: Vaiko

    அடுத்த செய்தி