• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசியல் பதவி முள் கீரிடம்: இது காலத்தின் கட்டாயம் - வைகோ மகன் துரை வையாபுரி விளக்கம்

அரசியல் பதவி முள் கீரிடம்: இது காலத்தின் கட்டாயம் - வைகோ மகன் துரை வையாபுரி விளக்கம்

துரை வையாபுரி

துரை வையாபுரி

அரசியல் பதவி முள் கிரீடம். இது காலத்தின் கட்டாயம் என்று வைகோவின் மகன் துரை வையாபுரி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி. வைகோ அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோதும் துரை வையாபுரி அரசியலுக்கு வராமல் இருந்தார். இந்தநிலையில், நடைபெற்றுமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க வேட்பாளர்களை ஆதரிரத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன்தொடர்ச்சியாக அவர் அரசியலுக்கு வருவார் என்று பேச்சு அடிபட்டது. இந்தநிலையில், நேற்று நடைபெற்ற ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு துரை வையாபுரிக்கு தலைமைக் கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அது அரசியல் களத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    துரை வையாபுரிக்கு பதவி வழங்கப்பட்ட நிலையில் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் கட்சியிலிருந்து விலகினார். இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய துரை வையாபுரி, ‘முழு நேர அரசியல்வாதியாக செயல்படுவேன். 106 பேரில் 104 பேர் எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அரசியல்வாதியாக இருப்பேன். அரசியல் வியாதியாக இருத்த மாட்டேன். மலையை தூக்கி எனது தோளில் வைத்துள்ளனர். விரைவில் தொண்டர்களின் விருப்பப்படி செயல்படுவேன். 6 சதவீத வாக்குகளை கொண்டிருந்த நிலையில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.

    அதனை சரி செய்து முன்னேற்றத்திற்கு அழைத்து செல்ல பாடுபடுவேன். மறைமுக வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் அரசியல் களத்திற்கு வந்தேன். எதிர்ப்பு அதிகமாக இருந்திருந்தால் வந்திருக்க மாட்டேன். நச்சு நிறைந்தது அரசியல் வாழ்க்கை என்பதை உணர்ந்தவன். அனைத்தையும் கட்சிக்காக இழந்த தொண்டர்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். 6 மாதத்திற்கு முன்பு வரை அரசியலுக்கு வருவேன் என கனவிலும் நினைக்கவில்லை.

    இளைஞரணிச் செயலாளர் கட்சியை விட்டு சென்ற அவரது முடிவை வரவேற்கிறேன். கட்சி மீதும் பொதுச்செயலாளர் மீதும் மரியாதை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது எதிர்காலம் சிறப்பாக அமையும். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உண்டு. மக்கள் சேவை செய்ய அதிகாரம் தேவை. இதில் வைகோவிடம் இருந்து மாறுபடுகிறேன். அரசியல் பதவி முள் கிரிடம். திணிக்கப்பட்ட காலத்தின் கட்டாயம். நான் அரசியலுக்கு வருவதை எனது மகள் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: