Home /News /tamil-nadu /

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் வைகோ மகன் துரை வையாபுரி... தலைமைக் கழகச் செயலாளர் பதவி!

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் வைகோ மகன் துரை வையாபுரி... தலைமைக் கழகச் செயலாளர் பதவி!

வைகோ, துரை வையாபுரி

வைகோ, துரை வையாபுரி

MDMK Vaiko Son Durai Vaiyapuri: வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு ம.தி.மு.கவில் தலைமைக் கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை எழும்பூர் கட்சி அலுவலகத்தில நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வைகோவின் மகனான துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்து கொள்ளவில்லை.

    இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், வைகோ உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் வாக்களித்தனர். அதில், 106 வாக்குகளில் 104 பேர் துரை வையாபுரிக்கு பதவி வழங்கவேண்டும் என்று வாக்களித்தனர். அதனையடுத்து, துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    அதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘துரை அரசியலுக்கு வரக்கூடாது என சொல்லியிருந்தேன். மதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தியதால் என் மகன் அரசியலுக்கு வந்துள்ளார். தலைமைக் கழகச் செயலாளர் என்ற முழு நேர பணியை மேற்கொள்வார்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: MDMK, Vaiko

    அடுத்த செய்தி