ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட வேண்டியவர் வைகோ... – தமிழிசை பேட்டி

தமிழக அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட வேண்டியவர் வைகோ... – தமிழிசை பேட்டி

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

வைகோ, கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு பிரச்சார வாகனத்தில் சென்று பிரதமரை தமிழகத்திற்குள் அனுமதிக்கமாட்டேன் என்கிறார். இதுபோன்ற விஷம கருத்துகளை மக்கள் மத்தியில் அவர் பரப்புகிறார் என்றார் தமிழிசை சவுந்தர்ராஜன்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தமிழக அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட வேண்டியவர் வைகோ என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

சென்னையிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:

“மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு பிரசார வாகனத்தில் சென்று பிரதமரை தமிழகத்திற்குள் அனுமதிக்கமாட்டேன் என்று கூறுகிறார். இதுபோன்ற விஷம கருத்துகளை மக்கள் மத்தியில் அவர் பரப்புகிறார். தமிழக அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட வேண்டியவர் வைகோ.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலைக்கு   அரசியல் தீர்வு இல்லை, சட்ட தீர்வு தான் உள்ளது. இதுகுறித்து, இப்போது பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்தியில் காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்தபோது அவர்களை ஏன் விடுதலை செய்யவில்லை? என்பதற்கு பதில் கூற வேண்டும்”

இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

Also watch

Published by:DS Gopinath
First published:

Tags: Tamilisai Soundararajan, Vaiko