ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வேண்டும்: வைகோ

ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வேண்டும்: வைகோ

வைகோ மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

வைகோ மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தமிழக ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று மதிமுக பொதுச்செயளாலர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம்  பேசிய வைகோ, பேருந்து எரிப்பு குற்றவாளிகள் மூன்று பேரை விடுதலை செய்ய நீதிமன்ற உத்தரவு இருக்கிறது என்று கூறும் தமிழக ஆளுநர், ஏழு தமிழர் விடுதலையை ஆளுநர் நிறைவேற்றலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்ட பிறகும் அதனை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வேண்டும் என்று கூறிய வைகோ, போட்டி அரசாங்கம் நடத்துகிறார் ஆளுநர் என்றும் சாடினார்.

மேலும், தமிழர் நலனில் அக்கறை காட்டாத ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Vaiko