மாநிலங்களவைக்குச் செல்லும் வாய்ப்பை தந்ததற்காக திமுகவுக்கு நன்றி - வைகோ
மாநிலங்களவைக்குச் செல்லும் வாய்ப்பை தந்ததற்காக திமுகவுக்கு நன்றி - வைகோ
ஸ்டாலின் மற்றும் வைகோ
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு பதில் அளித்த வைகோ , அவையெல்லாம் கூட்டாட்சி கொள்கைக்கு உலை வைக்கக்கூடிய மிக விபரீதமான ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களாகும்.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாய்ப்பு வழங்கியதால் தான் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கின்றேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் லட்சோப லட்சம் தொண்டர்கள் சார்பில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதைப் போல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொழிற்சங்கத் தலைவர் சண்முகம் அவர்களும் சிறந்த வழக்கறிஞர் வில்சன் அவர்களும் இன்று மாநிலங்களவைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இந்த மாநிலங்களவைக்கு செல்லுகின்ற ஒரு வாய்ப்பை தந்ததற்காக நான் மீண்டும் ஒருமுறை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நன்றி தெரிவிப்பதோடு தமிழக நலனுக்காக தமிழக வாழ்வாதாரங்களை காப்பதற்காக தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்கள் மீது கோரத் தாக்குதல் நடத்த படையெடுத்து வருகிற மத்திய அரசினுடைய திட்டங்களை தடுத்து நிறுத்துவதற்காக ஈழத்தமிழர்களின் உடைய உரிமையை காப்பதற்காக இந்திய நாட்டின் மதச்சார்பின்மையை கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்றுவதற்காக ஜனநாயகத்தின் ஒளி விளக்கு அணைந்து போகாமல் பாதுகாப்பதற்காக நான் நாடாளுமன்றத்திற்கு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு செல்லுகிற வாய்ப்பைப் பெற்றால் என் கடமையை அர்ப்பணிப்பு உணர்வோடு நிறைவேற்றுவேன் என்ற உறுதியை தமிழக மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும், என் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு உறுப்பினராக ஆக முடியுமா என்பதை பரிசீலனையின் போது தெரியும். வாய்ப்பு கிடைத்தால் தமிழ் நாட்டு நலனுக்காக இந்திய நாட்டின் ஜனநாயகத்தை மதச்சார்பின்மையை கூட்டாட்சி தத்துவத்தை காப்பதற்காக பணியாற்றுவேன் என்று வைகோ உறுதியளித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு பதில் அளித்த வைகோ , அவையெல்லாம் கூட்டாட்சி கொள்கைக்கு உலை வைக்கக்கூடிய மிக விபரீதமான ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களாகும்.
மேலும், அவற்றை தடுத்து நிறுத்த திராவிட இயக்கத்தினுடைய உயிர் மூச்சான கொள்கைகளை பாதுகாக்க வேண்டியது திராவிட இயக்கத் தோழர்கள் அனைவருடைய கடமையாகும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.