சித்திரை முதல் நாள் வாழ்த்துகள்: வைகோ!

தமிழ் மண்ணுக்குப் புதுப் பொலிவு ஊட்டிடக் கடமை ஆற்றுவோம்; களத்தில் வெற்றியும் காண்போம். தரணி எங்கணும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றும் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

news18
Updated: April 13, 2019, 11:35 AM IST
சித்திரை முதல் நாள் வாழ்த்துகள்: வைகோ!
வைகோ
news18
Updated: April 13, 2019, 11:35 AM IST
இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடங்குவதன் அடையாளம்தான் சித்திரை முதல் நாள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலும், அனைத்து இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்கின்றது.

Also read... மனைவியிடம் பேசினால் கூட வரி விதிக்க வாய்ப்பு உள்ளது - நடிகர் செந்தில் பேச்சு!

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் வஞ்சகத் தீர்ப்பு, மேற்குத் தொடர்ச்சி மலைகளை உடைத்து நொறுக்கும் நியூட்ரினோ எனும் நாசகாரத் திட்டம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் எனும் பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தி, காவிரி வேளாண் மண்டலத்தை பெட்ரோலிய மண்டலமாக மாற்றி, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் திட்டம் வகுத்த மத்திய அரசின் கேடுகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடும் வலிமையைப் பெற்றுள்ள தமிழகம், நடைபெற இருக்கின்ற 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில் நல்ல தீர்ப்பு அளிக்கும்.

தமிழ் மண்ணுக்குப் புதுப் பொலிவு ஊட்டிடக் கடமை ஆற்றுவோம்; களத்தில் வெற்றியும் காண்போம். தரணி எங்கணும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றும் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...