ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எம்.பி. தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பாடுபடுவேன்: வைகோ

எம்.பி. தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பாடுபடுவேன்: வைகோ

வைகோ மற்றும் ஸ்டாலின்

வைகோ மற்றும் ஸ்டாலின்

செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மதிமுக நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கிறது என்றார். மேலும் தங்கள் கூட்டணி மீது அக்கறை செலுத்தும் ஊடகங்களுக்கு நன்றி என்றும் அவர் கூறினார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்கு பாடுபடுவேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுக இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்திருந்த நிலையில், அதை ஸ்டாலின் கூற வேண்டும் என வைகோ கூறியிருந்தார். இது பெரும் பேசுபொருளானது.

இதனிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்காத ஆளுநரை கண்டித்து, வருகிற 3-ம் தேதி மதிமுக போராட்டம் நடத்தும் என வைகோ அறிவித்திருந்தார். இந்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாயலத்தில் ஸ்டாலினை வைகோ சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுக போராட்டத்துக்கு ஆதரவு அளித்ததன் மூலம், கூட்டணி குறித்து ஸ்டாலின் விளக்கம் அளித்ததுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மதிமுக நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கிறது என்றார். மேலும் தங்கள் கூட்டணி மீது அக்கறை செலுத்தும் ஊடகங்களுக்கு நன்றி என்றும் அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

வைகோ, ஸ்டாலின் சந்திப்பின் மூலம் கூட்டணி குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: DMK, MK Stalin, Vaiko