ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கன்னியாகுமரி வரும் பிரதமருக்கு நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம்: வைகோ!

கன்னியாகுமரி வரும் பிரதமருக்கு நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம்: வைகோ!

வைகோ

வைகோ

பிரதமர் கட்சி நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டால் அந்த நிகழ்வில் கருப்பு கொடி காட்டப்படாது என்றும் வைகோ விளக்கமளித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி வரும் பிரதமருக்கு நிச்சயம் கருப்பு கொடி காட்டுவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ பாக் பயங்கரவாதிகள் மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும், வரும் 1-ம் தேதி கன்னியாகுமரி வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து 6-ம் தேதி சென்னை வரும் மோடி அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிச்சயம் கருப்பு கொடி காட்டுவோம். அன்று வரும் பிரதமர் கட்சி நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டால் அந்த நிகழ்வில் கருப்பு கொடி காட்டப்படாது என்றும் வைகோ விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய வைகோ காணாமல் போன சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முகிலனை கண்டுபிடிக்க அவரது குடும்பத்தார் புகார் தர வேண்டும் என முதல்வர் கூறுவது பொறுப்பற்றதனம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lok Sabha Key Constituency, Vaiko