ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றம் மிகச்சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது - வைகோ

ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் மிகச்சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றம் மிகச்சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது - வைகோ
வைகோ (கோப்புப்படம்)
  • Share this:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சாரச் சட்டத் திருத்தம்-2020 ,  அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் அவசரச் சட்டம்-2020, விவசாயிகள் விலை உறுதி வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஆகிய 4 வேளாண் தொழில் சம்பந்தப்பட்ட சட்டங்கள் விவசாயிகளுக்குப் பெரும் அநீதி இழைக்கும் சட்டங்களாக இருப்பதாகவும், இந்த  நான்கு சட்டங்களையும் உடனடியாகத்  மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். என்ன கோரி தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லம் முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ


இலவச மின்சாரம் ரத்துசெய்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

Also read... கோவை சாலைகளில் வேல் சின்னம் வரைந்த 5 பேர் கைது - இந்து அமைப்பினர் போராட்டம்

மக்களின் கருத்துக்களை  கேட்காமலேயே, யதேச்சதிகாரமான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது, மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக கொண்டு வந்துள்ளது.இதில் அதிகம் பாதித்தது தமிழ்நாடு தான்  மேலும் எந்த காரணத்தை முன்னிட்டும் சுற்றுச்சூழல் ஆய்வை ரத்து செய்யக்கூடாது என்ற அவர் ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம் மிகச்சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது என தெரிவித்தார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading