ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிறுமி மித்ராவை காப்பாற்றுங்கள்: பிரதமருக்கு வைகோ கோரிக்கை!

சிறுமி மித்ராவை காப்பாற்றுங்கள்: பிரதமருக்கு வைகோ கோரிக்கை!

மித்ரா

மித்ரா

மித்ரா சிகிச்சைக்கு ரூ.16 கோடி செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுவரை 2 கோடியே 43 லட்சம்  ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. சிறுமியின் சிகிச்சைக்காக பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் சிகிச்சைக்கு உதவும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார், இவருடைய  மித்ரா மிகவும் அரிய மற்றும் நூதன முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அரிதான மரபணு கோளாறானது சிறுமி மித்ராவினுடைய தசைகளை ஒன்றன் பின் ஒன்று என கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. இதன் காரணமாக சிறுமி மித்ரா மூச்சு விடவும், உணவை விழுங்க முடியாமலும், பிற குழந்தைகள் செய்யக்கூடிய சின்னஞ் சிறு செயல்களையும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.

அவருடைய  சிகிச்சைக்கு ரூ.16 கோடி செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுவரை 8  கோடியே 44 லட்சம்  ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. சிறுமியின் சிகிச்சைக்காக பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமியை காப்பாற்ற உதவும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்”  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த, 23 மாத பெண் குழந்தை மித்ரா,Autosomal Recessive Spinal Muscular Atropy (SMA)) என்ற, அரிய வகை மரபு அணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். எனவே, நடக்க முடியாது. உரிய மருத்துவம் அளிக்க முடியாத நிலையில், உயிருக்கும் கேடு நேரும். இதற்கான ஒரே மருந்து zolgensma ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் விலை ரூ 16 கோடி ரூபாய் ஆகும். அதற்கு மேல், இந்திய அரசின் வரிகள் தனி. அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இந்த மருந்தை, குழந்தை இரண்டு வயது நிறைவு செய்வதற்குள் வழங்க வேண்டும். குழந்தையின் தந்தை சதீஷ், சிறுதொழில் செய்து வருகின்றார். இவ்வளவு பெரிய தொகையை, அவரால் திரட்ட இயலாது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, இதே நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற, உத்தரப் பிரதேசம், மீரட்டைச் சேர்ந்த இஷானி என்ற பெண் குழந்தைக்கு, சுவிட்சர்லாந்து நாட்டின் நோவார்டிஸ் மருந்து நிறுவனம், இந்த மருந்தை, லாட்டரி குலுக்கலில் தேர்வு செய்து, எவ்விதக் கட்டணமும் இன்றி, இலவசமாகத் தருவதாக அறிவித்து இருக்கின்றது. அந்தக் குழந்தை, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவம் நடைபெற்று வருகின்றது.

எனவே, அதே நோவார்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, zolgensma மருந்தை, தமிழ்நாட்டுக் குழந்தை மித்ராவுக்கும் பெற்றுத் தந்து, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுமாறு, தங்களை அன்புடன் வேண்டுகிறேன்” என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

Published by:Murugesh M
First published:

Tags: Modi, Vaiko