ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கருணாநிதிக்கு கவிதாஞ்சலி எழுத அவரால் மட்டுமே முடியும்! வைகோ உருக்கம்

கருணாநிதிக்கு கவிதாஞ்சலி எழுத அவரால் மட்டுமே முடியும்! வைகோ உருக்கம்

வைகோ

வைகோ

எம்.ஜி.ஆர் இறப்பின் பொழுது அண்ணா சாலையில் உள்ள அவரது சிலையை தாக்கிய அ.தி.மு.க தொண்டர்களின் புகைப்படத்தை முரசொலியில் வெளியிட்டு இவன் என் நெஞ்சில் குத்துகிறான், முதுகில் குத்தவில்லை என்று வெளியிட்டவர் கருணாநிதி.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  கருணாநிதி இல்லையென்று நினைக்கவேண்டாம். நமக்கு, மு.க.ஸ்டாலினை விட்டுச் சென்றுள்ளார் என்று ம.தி.மு.க பொதுச் செயாலளர் வைகோ தெரிவித்துள்ளார்.

  சென்னை பெரம்பூரில் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் 96 வது பிறந்தநாளையொட்டி அக்கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  அந்தக் கூட்டத்தில் பேசிய முத்தரசன், ‘ஆறு மாதத்தில் நடைபெறும் வேலூர் தொகுதி தேர்தலில் நிச்சயமாக தி.மு.க வெற்றி பெறும். நாங்குநேரி தொகுதியிலும் வெற்றி பெறும்.

  எடப்பாடி ஆட்சியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கல்லாப்பெட்டி ஆட்சி என்று தான் சொல்ல வேண்டும்.  தேர்தல் முடிந்தவுடன் மக்களுக்கு எதிரான திட்டங்களை இந்த அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. டெல்டா மாவட்டங்களை சுடுகாடாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை வேதாந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களைக் காப்பாற்ற இந்த அணி தொடரும்’ என்று பேசினார்.

  அதன்பிறகு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் திரை கவர்ச்சியில்லாமல் தி.மு.கவைக் கட்டிக் காப்பாற்றிய பெருமை கருணாநிதியைச் சாரும். எம்.ஜி.ஆர் இறப்பின் பொழுது அண்ணா சாலையில் உள்ள அவரது சிலையை தாக்கிய அ.தி.மு.க தொண்டர்களின் புகைப்படத்தை முரசொலியில் வெளியிட்டு இவன் என் நெஞ்சில் குத்துகிறான், முதுகில் குத்தவில்லை என்று வெளியிட்டவர் கருணாநிதி.

  மிசா காலத்தில் இந்திரா காந்தி அவர்களை எதிர்த்து விமர்சிக்க அஞ்சிய முதல் அமைச்சர்கள் மத்தியில் அவரை எதிர்த்துப் பேசியவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவைப் போன்றவர்களை எல்லாம் மிஞ்சிய நடிகர் நரேந்திர மோடி’ என்று பேசினார்.

  அதன்பிறகு பேசிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ’இந்தியையும் சமஸ்கிருதத்தையும் எளிதாக திணித்துவிடலாம் என்று நினைத்தால் குஜராத்தில் வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் தமிழகத்தில் அதற்கு வாய்ப்பில்லை. எகிப்து அழகி கிளியோபாட்ராவிற்கு முத்துக்களையும், ரோமாபுரிக்கு அரசுக்கு பொன்னாடையும் விற்ற தமிழ்நாட்டில் தற்போது குழந்தை வியாபாரம் நடைபெற்று வருகிறது.

  காந்தியின் கொள்கையை கொண்டு வந்த ஒரே தலைவர் கருணாநிதிதான். மாநில சுயாட்சியைக் கொண்டுவந்து மத்திய அரசை அதிர வைத்தவர் கலைஞர். அண்ணா மறைவிற்கு கருணாநிதி கவிதாஞ்சலி எழுதினார், கருணாநிதிக்கு, கவிதாஞ்சலி எழுத வேண்டுமென்றால் அவரால் தான் முடியும். கருணாநிதி இல்லை என்று நினைக்க வேண்டாம். மு.க.ஸ்டாலினை விட்டுச் சென்றுள்ளார்’ என்று பேசினார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Vaiko