'இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ்..!’- வைகோ எம்.பி ஆவேசம்!

’காங்கிரஸ் தயவால் நான் என்றைக்குமே நாடாளுமன்றம் செல்லமாட்டேன்’.

Web Desk | news18
Updated: August 8, 2019, 5:09 PM IST
'இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ்..!’- வைகோ எம்.பி ஆவேசம்!
வைகோ
Web Desk | news18
Updated: August 8, 2019, 5:09 PM IST
”காங்கிரஸ் தயவில் நான் ராஜ்யசபாவுக்குச் செல்லவில்லை. இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ்” என கே.எஸ்.அழகிரியின் விமர்சனத்துக்கு ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார் ராஜ்யசபா எம்.பி.வைகோ.

”காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸை குறை சொல்வதா? அரசியல் நாகரீகமற்றுப் பேசுகிறார் வைகோ” என தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜ்யசபா எம்.பி. வைகோ-வை கடுமையாக விமர்சித்தார். காஷ்மீர் விவகாரம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது வைகோ பேசிய பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு தமிழக காங்கிரஸில் எழுந்துள்ளது.

கே.எஸ். அழகிரி மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வைகோ. வைகோ பேசுகையில், “நான் ஒன்றும் காங்கிரஸ் தயவில் எம்.பி. ஆகவில்லை.


இனியும் காங்கிரஸ் தயவால் செல்லமாட்டேன். ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த காங்கிரஸுக்கு ஒருநாளும் மன்னிப்பே கிடையாது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங் இடம் கூட நான் நண்பனாக அங்கு இருக்கும் குறையை எடுத்துச் சொல்வேன். அவரை ஒரு நண்பராகப் பாராட்டுகிறேன். ஆனால், அரசியல் ரீதியாக எதிர்க்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் மூலமாக மட்டுமே ராஜ்யசபா எம்.பி ஆகப் பதிவு பெற்றேன். காங்கிரஸால் அல்ல. காஷ்மீர் விவகாரத்தின் முக்கியக் குற்றவாளியே காங்கிரஸ்தான்.

12 காங்கிரஸ் எம்.பி-க்களும் பாஜக-விடம் விலை போய்விட்டதா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Loading...மேலும் பார்க்க: பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்!
First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...