ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மீண்டும் பாஜக ஆட்சி வந்தால் நியூட்ரினோ,ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கொண்டு வரப்படும்- வைகோ

மீண்டும் பாஜக ஆட்சி வந்தால் நியூட்ரினோ,ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கொண்டு வரப்படும்- வைகோ

வைகோ

வைகோ

தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நாடு முழுவதும் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில், மதியம் 1.26 மணி நிலவரப்படி பா.ஜ.க 343 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

  இந்நிலையில் வைகோவிடம் இந்த வாக்கு எண்ணிக்கை  குறித்து கேள்வி எழுப்பிய போது, “மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை தமிழகம் திராவிட இயக்க பூமி என்பதை நிரூபித்து விட்டது. தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது” என்று  பேசினார்.

  பின் மத்தியில் மோடியின் வெற்றி குறித்த கேள்விக்கு “கருத்துக்கணிப்புகளின் அடிப்படையிலேயே முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. மோடி சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கவில்லை.புல்வாமா, ராணுவ பலம், மதவாதம் இவற்றை வைத்தே வாக்கு கேட்டார்.

  இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு விடப்பட்ட அறைகூவல். மீண்டும் பாஜக ஆட்சி வந்தால் நியூட்ரினோ,ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் கொண்டுவரப்படும் என்ற கவலை உள்ளது.

  அதிமுக ஆட்சி தள்ளாடிக்கொண்டிருக்கிறது.மீண்டும் தேர்தல் வந்தால் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும்” என்று கூறினார்.


  தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Election Result, Vaiko