ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் - வைகோ நம்பிக்கை!

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் - வைகோ நம்பிக்கை!

வைகோ மற்றும் ஸ்டாலின்

வைகோ மற்றும் ஸ்டாலின்

திமுக கூட்டணியின் வெற்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆளும் கட்சிகளுக்கு எதிரான எதிர்ப்பு அலையை காட்டுகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த முதல்வராக வருவார் என வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார்.

  நியூட்ரினோ மேகதாது அணை ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றாத வண்ணம் தமிழகத்திற்கான அரணாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி இருக்கும் என்று தெரிவித்தார்.

  திராவிட கோட்டைக்குள் பிஜேபியால் நுழைய முடியவில்லை. ஆளும் கட்சிகளின் அறைகூவலுக்கு எதிராக திமுக கூட்டணியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்தவர் கூட வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

  திமுக கூட்டணியின் வெற்றி ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆளும் கட்சிகளுக்கு எதிரான எதிர்ப்பு அலையை காட்டுகிறது.

  எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த முதலவராக வருவார் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்றும் வைகோ தெரிவித்தார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Vaiko