ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் - வைகோ ஆவேசம்

தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுனரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும், ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் - வைகோ ஆவேசம்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
  • News18
  • Last Updated: October 24, 2020, 12:11 PM IST
  • Share this:
மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவர்களது படத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் மத்திய அரசின் எடுபிடியாகவும், மோடியின் கைப்பாவையாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் 7.5% சட்ட மசோதாவில் ஆராய்ச்சி செய்ய என்ன இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், EWS பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்குவது ஓரவஞ்சனை எனவும், சங் பரிவார்களின் ஏவுதலுக்கு ஏற்ப ஆளுநர் தமிழர் விரோதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என குற்றம்சாட்டினார்.

நான்கு வார காலத்தில் எந்த வழக்கறிஞர்களை வைத்து ஆளுநர் ஆய்வு மேற்கொள்ளப் போகிறார் எனவும், ஆளுநருக்கு மனமில்லாததால்  இழுத்தடிக்கிறார். தமிழக ஆளுனரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றார்.

Also read... இந்தி தெரியாவிட்டால் அரசு வேலை கிடையாதா? - மத்திய அரசின் அறிவிப்பிற்கு வைகோ கடும் கண்டனம்


மேலும், திருமாவளவன் பெண்களை மதிப்பவர்; உயர்வானவர்; பண்பாடு நிறைந்தவர். அவர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு பதியப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்த கேள்விக்கு, இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது. முடிவு என்ன என்று எதிர்பார்ப்போம் என்றார்.
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading