முதலமைச்சர் பழனிசாமி என்ன யூதாஸா? வைகோ கேள்வி

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அதிமுகவை விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பார் எனக் கூறும் முதல்வர் என்ன யூதாஸா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் காணொளி கூட்டங்களிலும் மக்கள் கிராம சபை கூட்டங்களிலும் கோடிக்கணக்கான மக்களை சந்த்தித்து வருகிறார்.

திமுக தலைவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதரவு உள்ளது. முதலமைச்சர் உட்பட 8 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநரிடம் ஆதரப்பூர்வமாக எடுத்து வைத்துள்ளார். மேலும் தொகுதி பங்கீடு குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

Also read... நட்பு பாராட்டிக் கொண்டே அ.தி.மு.கவை பாஜக அழிக்க நினைக்கிறது - வேல்முருகன்

அனைத்து தொகுதிகளிலும் நேரில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன் என்றும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் இதற்காக வாழ்த்து தெரிவிக்கவும் மரியாதை நிமித்தமாகவும் சந்தித்தேன்.

மேலும், அதிமுகவை விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பார் எனக் கூறும் முதல்வர் என்ன யூதாஸா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: