ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமைதியாகவே போராடினோம் - வைகோ விளக்கம்

அமைதியாகவே போராடினோம் - வைகோ விளக்கம்

வைகோ

வைகோ

திமுக கூட்டணி வரும் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் பெரும் வெற்றி பெரும். விரைவில் கூட்டணி தொகுதி குறித்து தெரிவிக்கிறோம் என்றும் வைகோ தெரிவித்தார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில் மதிமுகவினர் அமைதியாக போராடினோம். அங்கு தாக்குதலில் யார் ஈடுபட்டார்கள் என்பது தெரியும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

  சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கஜாபயுல், மேகதாது அணைக்கட்டுதல், முல்லை பெரியார் அணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அநியாத்தை தமிழகத்திற்க்கு செய்துள்ளது மோடி அரசு.

  எதிர்காலத்தில் ஜனநாயகத்தை அழித்துவிடும் இந்த 10% இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்று கூறிய வைகோ, தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்காத மோடிக்கும் Go Back Modi என்று கூறுவதே சரி என்றும் தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய வைகோ, அபிநந்தனை உலகமே பாராட்டுகிறது. அபிநந்தனை அப்பகுதி மக்கள் தாக்கினார் பாக்கிஸ்தான் ராணுவம் அவரை மீட்டு சென்றது அவர்களிடம் அவர் பேசிய தைரியம் பராட்டுக்குறியது. அபிநந்தனை நெஞ்சில் வைத்து பூஜிக்கிறோம் என்று தெரிவித்தார்.

  அனுபவமே இல்லாத நிறுவனத்திற்கு மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் கொடுத்தது கண்டனத்துக்குறியது. இதனால் பாதுகாப்பு எப்படி உறுதி செய்யப்படும் என்றும் வைகோ கேள்வி எழுப்பினார்.

  மேலும், திமுக கூட்டணி வரும் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் பெரும் வெற்றி பெரும். விரைவில் கூட்டணி தொகுதி குறித்து தெரிவிக்கிறோம் என்றும் வைகோ தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய வைகோ, ஆண்டுதோறும் மதிமுக பொதுகுழு கூட்டம் நடத்தபடுகிறது. வரும் 6-ம் தேதி நடைபெரும் பொது குழுவில் தேர்தல் அறிக்கை தாயார் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Vaiko