தமிழக மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டதற்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, ‘இறந்த மீனவர்களின் உடலை மறு கூராய்வு செய்ய அனுமதிக்காத தமிழக அரசின் முதல்வராக பதவி வகிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அறுகதையில்லை என்று தெரிவித்தார். இந்திய அரசு தமிழகத்திற்கு விரோதமான அரசாக செயல்படுவதாகவும் தமிழக மீனவர்களின் கொலையில் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘தமிழகத்தில் புதிய அரசு உருவாகும் போது தமிழக மீனவர்களை பாதுகாக்க தமிழக காவல் படையே காக்கும் நிலைவரும். இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை தமிழர்களுக்கு எதிராக நடத்தி வருகிறது. இலங்கை அரசுக்கு எதிரா இதுவரை ஒரு வழக்கை கூட இந்திய அரசு ஏன் பதிவுசெய்யவில்லை. தெற்காசிய பிரதேசத்தில் இந்தியா தன் செல்வாக்கை தக்கவைக்கவே தமிழர்கள் கொல்லப்படும் போது இந்தியா அமைதிகாக்கிறது’ என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய திமுக அமைப்புச்செயலலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘மீனவர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் வைகோ எழுப்ப வேண்டும். அவ்வாறு நாடாளுமன்றத்தில் தமிழக மீனவர்கள் இறந்த விவகாரத்தை வைகோ எழுப்புகின்றபோது திமுக அதற்கு உறுதுணையாக இருக்கும்’ என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய திருமுருகன் காந்தி, ‘இந்திய வெளியுறவுக்கொள்கையை தமிழகத்திலுள்ள கட்சிகள் கேள்விக்குள்ளாக வேண்டும். இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் வேண்டும். பொருளாதாரத்தில் இந்திய நாட்டிற்கு தமிழகம் அளிக்கும் பங்களிப்பை விட குறைந்த பொருளாதார பலம் கொண்ட இலங்கையை கண்டிக்க இந்தியா தயங்குவதாக குற்றம்சாட்டிய திருமுருகன் காந்தி இந்திய வெளியுறவு கொள்கை தமிழர்களை பாதுக்காக்க தவறிவிட்டதாக குறைகூறினார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.