Home /News /tamil-nadu /

அதிமுக ஓட்டு போட்டிருந்தால் முத்தலாக் மசோதா நிறைவேறியிருக்காது! வைகோ விமர்சனம்

அதிமுக ஓட்டு போட்டிருந்தால் முத்தலாக் மசோதா நிறைவேறியிருக்காது! வைகோ விமர்சனம்

வைகோ

வைகோ

அந்தந்த மாநில அரசுகளுக்கு அணைகள் முழு கட்டுபாட்டில் வந்துவிடும். இதனால் தமிழகம் அழிந்து போய்விடும். சோவியத் ரஷ்யா போல் இந்தியாவும் துண்டு துண்டாக உடைந்து போய்விடும்.

  • News18
  • Last Updated :
    முத்தலாக் மசோதாவில் சிறப்பான கருத்துக்களை கூறிய அ.தி.மு.க எதிர்த்து ஓட்டு போட்டு இருந்தால் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டு இருக்கும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ‘பாராளுமன்றத்தை நீடித்து முக்கியமான மசோதாக்களை நீண்ட விவாதம் இல்லாமல் நிறைவேற்ற மத்திய அரசு துடிக்கிறது. அணைப் பாதுகாப்பு மசோதா நிறைவேறினால் இந்தியாவிலேயே தமிழகம் தான் பாதிக்க போகிறது.

    மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அணைப் பாதுகாப்பு மசோதா கொண்டு வர முயற்சி செய்தபோது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தை வாசித்து காட்டினேன். இதில் உள்ள பிரிவுகள் தமிழகத்திற்கு ஆபத்து என்று கூறினேன். கேரளாவில் முல்லைப் பெரியாறு, கர்நாடக, ஆந்திராவில் உள்ள அணைகளும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தந்த மாநில அரசுகளுக்கு அணைகள் முழு கட்டுபாட்டில் வந்துவிடும். இதனால் தமிழகம் அழிந்து போய்விடும்.

    சோவியத் ரஷ்யா போல் இந்தியாவும் துண்டு துண்டாக உடைந்து போய்விடும். அந்தந்த மாநிலத்தில் உள்ள அணைகளும் அந்தந்த மாநிலத்திற்கு முழு கட்டுபாட்டு என்றால் நெய்வேலி, திருச்சி, ஆவடி துப்பாக்கி தொழிற்சாலை கடற்படை தளம் எங்களுக்கு தான் சொந்தம் என்று சொல்ல கூடிய நிலை ஏற்படும் என்று சொன்னேன். அதைத் தொடர்ந்து மசோதாவை நிறைவேற்றப்படவில்லை.

    மசோதாவில் சில பிரிவுகளைச் சேர்த்து மிக மோசமான முறையில் மத்திய அரசு கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 8 கோடி தமிழர்களின் வாழ்வும் பாழாகிவிடும். வருங்கால சங்கதிகளை பற்றியும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் நிலை என்ன ஆகபோகிறது என்று கவலைப்படுகிறேன்.

    அ.தி.மு.க கருத்துக்களைச் சிறப்பாக பேசுகிறது. ஆனால் ஓட்டெடுப்பு வரும்போது தந்திரமாக வெளிநடப்பு செய்து விடுகின்றனர். எல்லாரும் எதிர்த்து ஒட்டு போட்டு இருந்தால் முத்தலாக் மசோதா தோல்வியடைந்து இருக்கும். சட்டவிரோத தடுப்பு மசோதா தான் என்னுடைய கன்னி பேச்சு. அப்போது திருத்தம் கேட்டு வாக்கெடுப்புக்கு விட கோரினேன்.

    16 ஓட்டு வித்தியாசத்தில் அரசுக்கு ஆதரவாக இருந்தது. மத்திய அரசுடன் சில கட்சிகள் ரக்சியமாக உறவு வைத்துக் கொண்டு எதிர்க்கிற மாதிரி பேசிவிட்டு ஓட்டெடுப்பு என்றதும் வெளிநடப்பு செய்துவிட்டு ஆதரித்துவிட்டு செல்கின்றனர். என்னுடைய திருத்தம் கோரிய ஓட்டெடுப்புக்கு காங்கிரஸ் ஆதரித்து. ஆனால் காங்கிரஸ், சட்டவிரோத மசோதாவிற்கு ஆதரவாக ஒட்டு போட்டனர்.

    ஒரு வார காலத்தில் கிடைத்த அனுபவம் முலம் தமிழகத்தின் உரிமைக்காக போராடுவேன். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். தேசவிரோத வழக்கில் சுதந்திரத்துக்கு பின் தண்டிக்கப்பட்ட ஒரே நபர் நான் தான். சுதந்திரத்துக்கும் முன் பெரிய தலைவர்களான காந்தி உள்பட பல தலைவர்கள் தண்டனை பெற்று உள்ளனர்.

    நான் சாதாரண தூசு. தேச துரோக வழக்கில் என் மீதான வழக்கில் ஒராண்டு தண்டனையை 2 ஆண்டாக மாறினால் என் பதவி பறிபோய்விடும். அதைப் பற்றி கவலைப்படவில்லை. எனக்கு பிடித்தமான வேலை பாராளுமன்ற வேலை. என்னை அனுப்பி வைத்த ஸ்டாலினுக்கும் தி.மு.கவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழிசைக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

    Also see:
    Published by:Karthick S
    First published:

    Tags: Vaiko

    அடுத்த செய்தி