எச்.ராஜா இதுவரை கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது - வைகோ

எச்.ராஜா இதுவரை கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது -  வைகோ
வைகோ
  • News18
  • Last Updated: September 23, 2018, 12:34 PM IST
  • Share this:
சமூக ஒருங்கிணைப்பை சீர்குலைக்கும் வைகையில் பேசிய  கருணாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜகவின் தேசிய அளவிலான பொறுப்பாளர் எச்.ராஜா இதுவரை கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக இன்று அதிகாலையில் எம்.எல்.ஏ கருணாசை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, அவரை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு கருணாஸ்-க்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு  எழும்பூர் நீதிமன்ற நீதிபதியான கோபிநாத் இல்லத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, கருணாஸ் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்தார். மேலும் அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கருணாஸை வைக்கும்மாறு அவர் உத்தரவிட்டார்.


இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தொடர்ந்து அவதூறாக பேசிவரும் எச்.ராஜாவை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக மதிமுக பொதுசெயலாளரான வைகோ நெல்லையில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், சமூக ஒருங்கிணைப்பை சீர்குலைக்கும் வைகையில் பேசிய கருணாஸ் கைது செய்யப்பட வேண்டியவர்தான். ஆனால்  எச்.ராஜ ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் எச்.ராஜாவை தேசிய மற்றும் பாஜகவின் மாநில தலைமைகள் இதுவரை ஏன் கண்டிக்கவில்லை என்றும் அவர் கைது செய்யப்படாததை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் கூறினார்.
First published: September 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading