தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசு - வைகோ கண்டனம்

தேர்தல் நடத்தும் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசு - வைகோ கண்டனம்
வைகோ (கோப்புப்படம்)
  • Share this:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக அரசு தேர்தல் நடத்தும் விதிமுறை 2019 மற்றும் 2020-ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இதன்மூலம் மூத்த குடிமக்களுக்கான வயது 80 இல் இருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்தால் 10 விழுக்காடு வாக்காளர்கள் அஞ்சல் வாக்கு பதிவு செய்யும் நிலை ஏற்படுவதால் தேர்தல் செலவினங்களும் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டு பதிவு செய்யலாம் என்ற திருத்தமும் பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடத்தும் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் போது அரசியல் கட்சிகளின் கருத்தை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டுமே தவிர ஆளுங்கட்சியின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க...

உயிரியல் பூங்காவில் காண்டாமிருகம் தாக்குதல் - தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் படுகாயம்

மத்திய அரசு தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் கொண்டு வந்துள்ள திருத்தங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading