கலிங்கப்பட்டியில் மகனுடன் வரிசையில் நின்று வைகோ வாக்குப்பதிவு

வைகோ வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கலிங்கப்பட்டி வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மகனுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார்.

 • Share this:
  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மகனுடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார்.

  தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 26.29% வாக்குகள் பதிவாகியுள்ளன.

  கொரோன பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று, ஆர்வத்துடன் வாக்ககளித்து வருகின்றனர். அத்துடன், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் அதிகாலை முதலே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

  Must Read : வாக்களிக்க சைக்கிளில் வந்து ஸ்கூட்டரில் திரும்பிய விஜய் - காரணம் என்ன?

   

  இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி வாக்குச்சாவடிக்கு தன் மகனுடன் வந்து, பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
  Published by:Suresh V
  First published: