ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தேனியில் பிரச்சாரம்: வைகோ அறிவிப்பு

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தேனியில் பிரச்சாரம்: வைகோ அறிவிப்பு

Vaiko announced campaign against neutrino project at Theni

Vaiko announced campaign against neutrino project at Theni

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நியூட்ரினோ ஆய்வக மையம் அமைப்பதை எதிர்த்து தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வருகிற ஜனவரி 31-ம் தேதி விழிப்புணர்வுப் பயணம் மேற்கொள்ளப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

  நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் மே17 இயக்கத்தின் திருமுருகன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வெற்றிச்செல்வன் மற்றும் கி.வெ.பொன்னையன், லெனின் ராஜப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை தந்திரமாக கொண்டுவர மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜனவரி 31ஆம் தேதி விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ

  , “மத்திய அரசு இத்திட்டதை சிறப்புத் திட்டமாக அறிவித்து தடைகள் ஏதுமின்றி சுற்றுச்சூழல் அனுமதி வழங்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். அத்திட்டத்தை செயல்படுத்துவதால் இடுக்கி மற்றும் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு எக்காரணம் கொண்டும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை வழங்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

  Published by:Veeramani Panneerselvam
  First published:

  Tags: Neutrino Project, Theni, Thirumurugan Gandhi, Vaiko