அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ திடீர் அனுமதி!

"தமிழக பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதற்காக தானே வழக்கறிஞராக ஆஜராகி வாதிட்டும் வருகிறார்"

news18
Updated: August 18, 2019, 3:04 PM IST
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ திடீர் அனுமதி!
வைகோ
news18
Updated: August 18, 2019, 3:04 PM IST
மதிமுக பொது செயலாளர் வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசியலில் ஆக்டிவ் ஆக செயல்படும் அரசியல் தலைவர்களில் வைகோவும் ஒருவர். தமிழக பிரச்னைகளுக்காக அடிக்கடி நடைபயணம் மேற்கொள்ளும் வைகோ, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே தமிழக பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதற்காக தானே வழக்கறிஞராக ஆஜராகி வாதிட்டும் வருகிறார்.


75 வயதிலும் தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, போராட்டங்களில் பங்கேற்பது ஆகியவற்றை வழக்கமாகக் கொண்டிருப்பதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னையால் மதிமுக பொது செயலாளர் வைகோ மதுரை அப்பலோ மருத்துவ மனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வெடுக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசார பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மதிமுக வட்டாரம் தெரிவித்துள்ளது.

Loading...

வீடியோ பார்க்க: சாதனை நாயகன் வாஜ்பாய்

First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...