கருணாநிதியை விமர்சித்ததற்கான அவதூறு வழக்கில் வைகோ விடுதலை!

அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதியை விமர்சித்ததற்கான அவதூறு வழக்கில் வைகோ விடுதலை!
கருணாநிதி | வைகோ
  • News18
  • Last Updated: August 30, 2019, 11:03 AM IST
  • Share this:
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்ததற்காக, 2006-ல் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வைகோவை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதினார். அதை தொடர்ந்து அப்போதைய தி.மு.க அரசு வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது.

இந்த அவதூறு வழக்கிலிருந்து வைகோவை விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை தற்போது,சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் நடைபெற்று வந்தது,


கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில், வைகோ, கருணாநிதியை குற்றம் சாட்டி பேசிய செய்தி வெளியானதை அடிப்படையாக கொண்டு இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் சாட்சிகளான இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் தலைமை செய்தியாளர், வெளியீட்டாளர் உள்ளிட்டோரிடம் சாட்சிகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகள் விசாரணை, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை என அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பு கடந்த 27-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தீர்ப்பு திடீரென இன்று மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி இன்று வழங்கிய தீர்ப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

பத்திரிகை செய்தியை தவிர்த்து வேறு எந்த ஆதாரங்களையும் அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை. செய்தியை எழுதிய நிருபரை விசாரிக்கவில்லை

அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக வைகோ இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை அதற்கான காரணங்களை கூறி அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதால் என்று தீர்ப்பளித்து உள்ளதாக கூறினார்.

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com