புயலுக்கு முந்தைய நிலைதான் இன்று காஷ்மீரின் நிலைமை: வைகோ

கலைஞர் நினைவு நாள் குறித்து பேசிய அவர், கலைஞர் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: August 7, 2019, 9:30 AM IST
புயலுக்கு முந்தைய நிலைதான் இன்று காஷ்மீரின் நிலைமை: வைகோ
வைகோ
Web Desk | news18
Updated: August 7, 2019, 9:30 AM IST
புயலுக்கு முந்தைய நிலைதான் இன்று காஷ்மீரின் நிலைமையாக உள்ளது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
”பாஜகவின் மதிப்பு வாய்ந்த தலைவர்களில் ஒருவரான


சுஷ்மா சுவராஜ் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்”

அதன் பின்னர் காஷ்மீர் பிரச்சனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,” பரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கவில்லை என்றால் ஏன் பூட்டி வைக்கிறார்கள். முதுகில் குத்தாதீர்கள் வேண்டுமென்றால் நெஞ்சில் குத்துங்கள் என்றிருக்கிறார். அபாயகரமான பிரச்சனை இந்தியாவில் உருவாகியுள்ளது. காஷ்மீர் பிரச்சனை பன்னாட்டுப் பிரச்சனையாக உருவெடுக்கும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "காஷ்மீர் இளைஞர்கள் உள்ளம் நெருப்பாகியுள்ளது. மூர்க்கத்தனமாக மத்திய அரசு காஷ்மீர் விஷயத்தில் நடந்திருக்கிறது. காஷ்மீர் பிரச்சனையில் வினை விதைத்து விட்டார்கள். வினை அறுப்பார்கள். புயலுக்கு முன்னால் உள்ள நிலைதான் இன்று காஷ்மீரின் நிலைமை” என்றார்.

Loading...

 

மேலும் படிக்க... சிறப்பு அந்தஸ்தை தொடக்கத்திலிருந்தே எதிர்க்கும் பா.ஜ.க!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...