பிக்பாஸ் ரம்யா, ஷிவானிக்கு கிடைத்த ஓட்டு கூட கமலுக்கு விழாது - வைகை செல்வன்

பிக்பாஸ் ரம்யா, ஷிவானிக்கு கிடைத்த ஓட்டு கூட கமலுக்கு விழாது - வைகை செல்வன்

கமல்ஹாசன்

எல்லோரும் ஓட்டு போடுவதற்கு கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலை பிக்பாஸ் என்று நினைக்கிறார்.

  • Share this:
    எல்லோரும் ஓட்டு போடுவதற்கு கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலை பிக்பாஸ் என்று நினைக்கிறார் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறியுள்ளார்.

    கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்.ஜீ.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இன்றைக்கு பல பேர் கட்சியை தொடங்கி விட்டு என்ன செய்வது என்று தெரியமால் முழித்து வருகின்றனர்.

    பள்ளி கட்டிடத்திற்கு வாடகை கூட தர முடியாத ஒருத்தர் (ரஜினிகாந்த்) இன்றைக்கு கட்சியே வேண்டாம் என்று சொல்லி விட்டர். வாக்காளிடம் கடன் சொல்லிய ஒருவர் இருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்களர்களுக்க 5 ஆயிர ரூபாய் தருகிறேன் என்று கடன் சொல்லியவர் தான் டி.டி.வி.தினகரன்.

    வைகை செல்வன்


    கமலஹாசனை மக்கள் நடிகராக மட்டும் தான் பார்ப்பார்கள். எல்லோரும் ஓட்டு போடுவதற்கு கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலை பிக்பாஸ் என்று நினைக்கிறார். ஷிவானி, ரம்யாபாண்டியனுக்கு விழுந்த ஓட்டுக்கூட கமல்ஹாசனுக்கு பொது தேர்தலில் விழாது.

    மேலும் படிக்க... சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் - பள்ளிக்கல்வித் துறை

    மு.க.ஸ்டாலின் ஒரு கொரோனா, உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா. பெண்களை பற்றி உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக பேசி வருகிறார்” என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published: