லண்டன் தேம்ஸ் நதி போல் வைகை நதி மாறும் - அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

மதுரையில் வெகுவிரைவில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை சத்தமில்லாமல் அதிமுக அரசு செய்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

லண்டன் தேம்ஸ் நதி போல் வைகை நதி மாறும் - அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு
அமைச்சர் செல்லூர் ராஜு.
  • Share this:
மதுரை மாநகர் மாவட்டம் அதிமுக மேற்கு இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம்  தனியார் திருமன மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு,"அடுத்த தேர்தலில் திமுக ஆட்சி பிடிக்குமா? பிடிக்காதா? என்று ஸ்டாலின் ஏங்கிக் கொண்டிருக்கிறார். யூடியூப், ஃபேஸ் புக்,டுவிட்டர் மூலம் ஏதாவது செய்தியை பரப்பி அரசுக்கும் கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அரியர்ஸ் மாணவர்கள் பாஸ் என்று துணிச்சல் முடிவை எடுத்தவர் நம் முதல்வர்.

மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பத்தாம் வகுப்பில் அனைவரும் பாஸ் என்று அறிவித்தவர் முதல்வர். ஐந்து முறை ஆட்சியில் இருந்த திமுகவால் மதுரைக்கு ஒரு வளர்ச்சியும் இல்லை, தற்போது அதிமுக  ஆட்சியில் மதுரையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மதுரையில் வெகுவிரைவில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை சத்தமில்லாமல் அதிமுக அரசு செய்து வருகிறது.


லண்டன் தேம்ஸ்  நதியைப் போல் மதுரை வைகை நதி விரைவில் மாற உள்ளது.மதுரையில் போக்குவரத்து நெரிசல் எதிர்காலத்தில் இருக்காது. அப்துல் கலாம் சொன்னது போல்  அதிமுகவில் முதல்வராக வேண்டும் என்று கனவு காணுங்கள் நீங்களும் அதிமுக ஆட்சியில் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது. மின்சாரக் கம்பிகள்  மீது துணி காய போட்ட காலம், திமுக ஆட்சி காலம். திமுக ஒரு ரவுடி கட்சி அதுபோல அரசியல் கட்சி இருக்கவே கூடாது, அதை அழிக்கும் வரை அண்ணா திமுக ஓயவே ஓயாது. அதனை அளிக்கும் சக்தி இளைஞர்கள் நீங்கள்தான். 2021 திமுக கதை முடியப் போகிறது," என்று பேசினார்.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading