தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை.. முழு கொள்ளவை எட்டிய வைகை அணை..
காலம் கடந்தும் நிற்காமல் வெளுத்து வாங்கும் கனமழையால் தென்மாவட்டங்களில் ஆறு, குளங்கள் நிரம்பி உள்ளன. 5 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது.

காலம் கடந்தும் நிற்காமல் வெளுத்து வாங்கும் கனமழையால் தென்மாவட்டங்களில் ஆறு, குளங்கள் நிரம்பி உள்ளன. 5 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது.
- News18 Tamil
- Last Updated: January 17, 2021, 11:49 AM IST
பெரும்பாலும் டிசம்பர் மாத இறுதியில் நிறைவடையும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு தற்போது வரை நீடிக்கிறது. இதன்காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை ஓராண்டுக்குபின் அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது.
71 அடி கொள்ளவு கொண்ட வைகை அணை, தேனி. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. அணைக்கு தற்போது 3961 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து அதிகளவு நீர் திறந்துவிட வாய்ப்புள்ளதால் வைகை ஆற்றங்கரையொரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரல் ஆற்றின் பழைய பாலம் நீரில் மூழ்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் காலம் கடந்தும் நிற்காத மிதமிஞ்சிய மழையால், தைமாத அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகள் துயறுற்று உள்ளனர்.
மேலும் படிக்க...ஈஸ்வரன் திரைப்படத்தை கொண்டாடும் ரசிகர்கள்... முதல் நாளிலே ரூ.5 கோடி வசூல்...
கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பாசி, சோளப் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் வயல்களில் அமர்ந்து விவசாயிகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
71 அடி கொள்ளவு கொண்ட வைகை அணை, தேனி. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. அணைக்கு தற்போது 3961 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து அதிகளவு நீர் திறந்துவிட வாய்ப்புள்ளதால் வைகை ஆற்றங்கரையொரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரல் ஆற்றின் பழைய பாலம் நீரில் மூழ்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.