9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.. எப்போது?

9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.. எப்போது?

மாணவர்கள்

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

 • Share this:
  கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10 மாதங்களுக்குப் பின் ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பிற்குப் பின் மாணவர்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

  இந்நிலையில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் “9,11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க அனுமதிக்கப்படுகிறது. விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...முதன் முறையாக பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல்..

  கல்வித்துறை அதிகாரிகள் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்குவதற்காக இட வசதிகள் உள்ளதா, காற்றோட்ட வசதி உள்ளதா என பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: