முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைமை அலுவலகத்தில் நடிகர் வடிவேலு என்ட்ரி

10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைமை அலுவலகத்தில் நடிகர் வடிவேலு என்ட்ரி

மீண்டும் திரைத்துறையில் நடிகர் வடிவேலுக்கு வாய்ப்புகள் பெருகும் எனவும் நகைச்சுவையில் நாமெல்லாம் வயிறு குலுங்க சிரிக்கும் காலம் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கலாம்

மீண்டும் திரைத்துறையில் நடிகர் வடிவேலுக்கு வாய்ப்புகள் பெருகும் எனவும் நகைச்சுவையில் நாமெல்லாம் வயிறு குலுங்க சிரிக்கும் காலம் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கலாம்

மீண்டும் திரைத்துறையில் நடிகர் வடிவேலுக்கு வாய்ப்புகள் பெருகும் எனவும் நகைச்சுவையில் நாமெல்லாம் வயிறு குலுங்க சிரிக்கும் காலம் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திமுகவின் நட்சத்திர பேச்சாளராக 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வலம் வந்தவர் நகைச்சுவை நாயகன் நடிகர் வடிவேலு ஆனால் அந்த தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத சூழல் ஏற்பட்ட பிறகு அவர் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி அமைதியாக இருந்தார். குறிப்பாக அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்பும் வெகுவாக குறையத் துவங்கியதும் அப்போதுதான் என  சினிமாவுலகம் அறிந்திருக்கும்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் வடிவேலு முதலமச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்,

Also Read:  இஸ்லாமிய இளைஞரை மணக்க இருந்த இந்து பெண்: மூளை சலவையால் திருமணத்தை நிறுத்திய பெற்றோர்?!

ஒரே மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் அளவில் கொரோனா கட்டுப்படுத்தி உள்ளார் என முதல்வரை பாராட்டினார். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நிலவுவதாகவும் கூறி பாராட்டிப் பேசினார்.

மீண்டும் பழையபடி அதிக படங்களில் உங்களைப் பார்க்கலாமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “கண்டிப்பாக நல்லதே நடக்கும்” என்று கூறினார். பின்னர் தலைமைச் செயலகத்தில் இருந்து நேரடியாக அண்ணா அறிவாலயம் சென்று அவர் சுமார் பத்தாண்டுகளுக்கு பிறகு அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக ராஜ்யசபா உறுப்பினர் ஆர் எஸ் பாரதி பூச்சி முருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து கலகலப்பான நட்பை பகிர்ந்துள்ளார் .எனவே மீண்டும் திரைத்துறையில் நடிகர் வடிவேலுக்கு வாய்ப்புகள் பெருகும் எனவும் நகைச்சுவையில் நாமெல்லாம் வயிறு குலுங்க சிரிக்கும் காலம் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Actor Vadivelu, Anna Arivalayam, DMK