• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு... தடுப்பூசி மையங்களில் காத்திருக்கும் பொதுமக்கள்!

தமிழகத்தில் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு... தடுப்பூசி மையங்களில் காத்திருக்கும் பொதுமக்கள்!

தடுப்பூசி

தடுப்பூசி

தமிழகத்தில் மொத்தமாக 1,57,76,860 தடுப்பூசிகள் வந்துள்ளது அதில் நேற்று வரையும் 1,56,74,439 தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொண்டால் மட்டுமே முழுமையாகக் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள தயக்கம் காட்டிய நிலையில் தற்போது மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள். இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்து 73 ஆயிரத்து 654 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்

    மேலும், தமிழக அரசின் கையிருப்பில் ஒரு லட்சத்திற்கும் குறைவான தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதால் தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரையில் டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் நேரடியாக வந்து தடுப்பூசி போடுபவர்களுக்கு 130 பேரும், ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு 70 பேர் என்ற விதத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    Also Read:    கொடைக்கானல் செல்ல விருப்பமா? லேட்டஸ்ட் நியூஸ் தெரிஞ்சுக்கோங்க..!

    கோடம்பாக்கம் மையத்தில் மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்து இருந்து டோக்கனை பெற்று தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள், டோக்கன் இல்லாதவர்கள் வரிசையில் காத்திருந்தும் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்ப கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். மேலும், கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள அனைத்து மையத்திலும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தவில்லை. சென்னையில் 45 தடுப்பூசி மையங்கள் மற்றும் 18 நகர்புற சுகாதார மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், தமிழகத்தில் மொத்தமாக 1,57,76,860 தடுப்பூசிகள் வந்துள்ளது அதில் நேற்று வரையும் 1,56,74,439 தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியாக 4,73,654 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் மட்டும் இதுவரை 26,11,414 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: